
கொழும்பு, பெப் 26: கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 643,072 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை,608,226 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
மேலும், நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18,704 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,142 ஆக அதிகரித்துள்ளது.