குடும்பமாக 7 மேற்பட்ட இடங்களில் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

இளவாளை, பெப்.25

யாழ்.இளவாலை பகுதியில் இடம்பெற்ற 7ற்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 23 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் தந்தையும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்கள் வேலை மற்றும் இதர தேவைகளுக்காக வெளியில் செல்லும் சமயத்தல் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் சம்பவங்கள் 7ற்கும் மேற்பட்டவை நடந்திருக்கின்றது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக இளவாலை பொலிஸாரிடம் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு நடத்திய விசாரணைகளில் யாழ்.வலி,வடக்கு – வறுத்தலைவிளான் பகுதியை சேர்ந்த
23 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், திருட்டு நகைகளை அடகு வைப்பதற்கும், விற்பதற்கும் உதவிய குற்றச்சாட்டில் 53 வயதான தந்தையும், 36 வயதான மகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *