
புங்குடுதீவு , பெப்.26
நூலக பேருந்து வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூலக பேருந்தொன்று வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபையின் பழுதடைந்த பேருந்துகளை திருத்தி பாடசாலை மாணவர்களின் நலன் கருதி நூலகமாக மாற்றப்பட்டு பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் இந்த பாடசாலைக்கு மாத்திரமே நூலகப் பேருந்து வழங்கப்பட்டுள்ள்மை குறிப்பிடத்தக்கது. தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, இலங்கை போக்குவரத்து சபை, ஸ்ரீலங்கா டெலிகொம், தெரண தொலைக்காட்சி ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெற்ற இத் திட்டம் இலங்கையின் 25 மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.