ஜி.எல். பீரிஸ்- ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் சந்திப்பு

பாரிஸ், பெப் 26: வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், சர்வதேச பங்காளித்துவங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ஜுட்டா உர்பிலைனனை சந்தித்து பேசினார். பாரிஸில் உள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் மாநாட்டில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பு தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது: ஆடைகள், சுவையூட்டப்பட்ட தேயிலைகள், லவங்கப்பட்டை, மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருட்கள், மீன்பிடி பொருட்கள், கற்கள், ஆபரணங்கள் போன்ற பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி தொடர்பாக இலங்கை- ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையான புரிந்துணர்வை வலுப்படுத்துவது தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்பிலைனனுடன் ஜி.எல்.பீரிஸ் கலந்துரையாடினார்.

மேலும், விருந்தோம்பல் துறை, தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், மின்சாரம் மற்றும் ஆற்றல், மற்றும் மருந்து தயாரிப்புகள் போன்ற முன்னுரிமைத் துறைகளில் முதலீடுகள் தொடர்பான கூட்டு.
சுகாதாரக் கொள்கை ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் துறைமுகங்களுக்கிடையேயான இணைப்பு, தொழில் பயிற்சி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மக்கள் தொடர்புகொள்வதற்கான பிற அம்சங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பகுதியைச் சூழவுள்ள நாடுகளுக்குச் செல்வதில் வெளிநோக்குப் பார்வையை அதிகரித்து வருவதாகவும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சரால் அடையாளம் காணப்பட்ட செயற்பாடுகளில் தெளிவான ஒருங்கிணைப்பு இருப்பதாகவும் ஐரோப்பிய ஆணையாளர் உர்பிலைனென் அமைச்சர் பேராசிரியர் பீரிஸிடம் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *