
யாழ்ப்பாணம், பெப்.26
யாழ். அராலி மத்தி பகுதியில் மனைவி இறந்து 18 ஆவது நாள் அவரது கணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் மிகுந்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
செல்வரத்தினம் பரமேஸ்வரி என்பவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2022.02.07 அன்று உயிரிழந்தார்.
பின்னர் நேற்றைய தினம் சிறந்த உடல் ஆரோக்கியத்தோடு இருந்த அவரது கணவர், மகளிடம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு கதிரையில் உட்கார்ந்திருந்தவாறு உயிரிழந்துள்ளார். சிற்றம்பலம் செல்வரத்தினம் என்பவரே நேற்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.