
சிறுபான்மையினரின் உரிமைகளை தடுப்பது மேலும் கவலையை ஏற்படுத்துவதுடன் நல்லிணக்கத்தையும் தடுக்கின்ற செயலாக அமைகின்றதென ஐ.நா உயர் ஸ்தானிகர் விசனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் பேரவையில், மீள் புதிப்பிப்பு செய்யப்பட்ட பிரேரணை 46/1 சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை 46/1 தீர்மானத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களைச் செயல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமும், மீள்புதிப்பு செய்யப்பட்ட அறிக்கையில் அடங்குகின்றது.
இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை மற்றும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னெடுப்பதில் காணப்படுகின்ற தொடர்ச்சியான சவால்கள் பற்றிய தனது அவதானிப்புகளை முன்வைக்கின்றது.
2021 மாசி மாதத்தில் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உயர் ஸ்தானிகரின் கடைசி அறிக்கையிலிருந்து, அடையாளம் காணப்பட்ட அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்கள் குறித்து மேற்குறிப்பிட்ட சரத்து கவனம் செலுத்துகின்றது.
இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரித்தல், குறிப்பாக 2009 இல் முடிவடைந்த யுத்தம் உருவாக்கிய வடுக்கள் ஆகியவற்றுக்கான பொறுப்புக்கூறல்கள் தொடர்ந்து நடைபெறாமை கவலையளிக்கிறது.
இராணுவ மயமாக்கல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை குறைத்து மதிப்பிடுதல் , இன-மத நாகரீக வாதத்தின் தொடர்ச்சியான போக்குகளை குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
அத்துடன், சிறுபான்மையினரின் உரிமைகளை தடுப்பது மேலும் கவலையை ஏற்படுத்துவதுடன் நல்லிணக்கத்தையும் தடுக்கின்ற செயலாக அமைகின்றது.
எவ்வாறாயினும், உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறைக்கான பரந்த பார்வை அவசரமாகத் தேவைப்படுகின்றது என உயர் ஸ்தானிகர் கூறுகின்றார்.
அதே போல் உறுதியான நிறுவன மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த சீர்திருத்தங்கள் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வழிமுறையாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.