
கொழும்பு, பெப்.26
கெரவலப்பிட்டி பகுதியில் பூங்கொடி கண்ணன் எனப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜின் உதவியாளர் ஒருவர் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஒரு கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான ஹெரோயினும், போதைப்பொருளும் வர்த்தக்கத்தில் ஈட்டியதாக கருதப்படும் 793,350 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான பூங்கொடி கண்ணனின் அறிவுறுத்தலின் பேரில் இவர் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் பூங்கொடி கண்ணன் தெரிவித்த இடத்திற்குச் சென்று அங்குள்ள பெண் ஒருவரிடமிருந்து போதைப்பொருளை பெற்றுக் கொண்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் போதைப்பொருளை பல்வேறு நபர்களுக்கு வழங்கியுள்ளதாகவும், அதன் மூலம் பெற்றுக் கொண்ட பணத்தை குறித்த பெண்ணிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.