எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்கவை ஆதரித்து வவுனியா நகரில் தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
வவுனியா, குடியிருப்பு பகுதியில் இன்று(07) காலை ஆரம்பமாகிய பிரச்சார நடவடிக்கை வவுனியா நகர வர்த்தக நிலையங்கள் மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், ஆதரவு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.