
தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செய்தித் தொடர்பாளர் கே. எஸ். ராதாகிருஷ்ணன் இலங்கை வந்துள்ளார். அவரை அவரது நெடுங்கால நண்பரும் இலங்கைச் சிவசேனைத் தலைவருமான மறவன் புலவு சச்சிதானந்தன் கொழும்பு விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரவேற்றார்.
இலங்கையில் தமிழரின் அரசியல் எதிர்காலம் – சிறப்பாக சைவ தமிழரின் எதிர்காலம் தொடர்பாக தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு ஒத்துழைப்பு ஆதரவு தொடர்பாக பேச்சு நடத்தவே கே. எஸ். ராதாகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் சில நாட்கள் தங்கியிருக்கவுள்ள அவர், இலங்கை சிவசேனை அமைப்பினரை சந்தித்துப் பேசவுள்ளார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
மேலும், தமிழகத்தில் நடைபெறவுள்ள 11ஆவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடர் பாக இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைத் தலைவர்களுடனும் அவர் பேச்சு நடத்துவார் என்றும் கூறப்பட்டது.