
கொழும்பு, பெப் 26: திங்கட்கிழமை முதல் மீண்டும் மின் வெட்டு அமல்படுத்தப்படும் என்று இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறுகையில் ” இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு இருக்காது. இந்த இரண்டு தினங்களும், பகல்வேளையில் ஏ.பி மற்றும் சி வலயங்களில் 3 மணித்தியாலயங்களும், ஏனைய வலயங்களில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் வெட்டு அமல்படுத்தப்படும்.
ஆனால், திங்கள்கிழமை தொடக்கம் மீண்டும் 6 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், 38,400 மெற்றிக் டன் பெட்ரோலுடன் கப்பல் ஒன்று சனிக்கிழமை நாட்டை வந்தடையம் என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் தாங்கிய கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.