சூடு சுரணையுள்ள தமிழனின் வாக்கு தமிழ் பொது வேட்பாளருக்கே- வர்ணகுலசிங்கம் வலியுறுத்து..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரோசமுள்ள சூடு சுரணையுள்ள தமிழன் கட்டாயமாக தமிழ் பொது வேட்பாளருக்கே தனது வாக்கை செலுத்துவான் என வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் நகரில் உள்ள தமிழ் பொது வேட்பாளர் அலுவலகத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க 2 வருடமாக ஜனாதிபதியாக இருந்த நிலையில் அதாள பாதாளத்தில் இருந்த நாட்டை தூக்கிவிடுவதாக கூறினார்.  எனினும் அவர் நாட்டை தூக்கி விட்டாரா?

நீங்கள் கொள்ளையடித்து அதனை பெட்டி பெட்டியாக உங்களுடைய ஆட்களுக்கு கொடுத்துள்ளீர்கள். 60,80, 120 கோடிகள் என உங்களுடைய ஆட்களுக்கு கொடுத்துள்ளீர்கள்.  இந்த பணம் எங்கிருந்து வந்தது எனவும் கேள்வியெழுப்பினார்.

நாட்டு மக்களின் தலையில் வரிச் சுமையை ஏற்றிவிட்டு நீங்கள் கொள்ளையடித்ததை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்களை இங்கே இறக்கி விடுகின்றீர்கள்.

எனவே, நாங்கள் பாரம்பரியமாக உண்மையான தமிழனாக வடக்கு கிழக்கு இணைந்து  வாழவேண்டுமாக இருந்தால் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

இன்று நீங்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்குகளை செலுத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விருப்பமில்லை என்ற முடிவை நாம் எடுக்க வேண்டியிருக்கும்.

வடக்கிலும் கிழக்கிலும் நாம் 7 இலட்சம் வாக்குகளை எடுக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *