ஜனாதிபதி ரணில் 13 ஆம் திகதி புத்தளம் விஜயம்..!

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , புத்தளம் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை   புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புத்தளம் வருகையை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று இன்று  புத்தளம் நகர சபை விளையாட்டு மைதான கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக மாயாதுன்ன ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலில் புத்தளம் தலைமைய பொலிஸ் பொறுப்பதிகாரி, உட்பட பாதுகாப்பு பிரிவினரும், அரச திணைக்களத் தலைவர்களும் கலந்துகொண்டதுடன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா, ஜனாதிபதியின் புத்தளம் மாவட்ட  இணைப்பாளர் றுசிர மற்றும் புத்தளம் பிரதேச சபை தவிசாளர் அன்ஜன சந்தருவன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ரபாத் அமீன் , பாராளுமன்ற உறுப்பினரின் ஊடகச் செயலாளர் நௌபர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை நாளுக்கு நாள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து பலர் அவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கும், அவரின் கரங்களை பலப்படுத்தவும் எங்களோடு இணைந்து கொள்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இதன்போது தெரிவித்தார்.

முன்னோக்கி செல்வதற்கு  ரணில் விக்ரமசிங்கதான் பொருத்தமான தலைவர் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *