முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளர் எஸ்.விஜயகாந்த் தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் கலந்துரையாடல் யாழ் புனித பத்திரிசிரியார் கல்லூரிக்கு அண்மையாக உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.