கண்டி – யட்டிநுவர வீதியில் 400 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கல்பிஹில்ல அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி வேனில் போதைப்பொருளைக் கொண்டு சென்ற போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கண்டி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.