ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்னவின் கூற்றுப்படி, தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு நபருக்கு 12 மாதங்களுக்கும் மேலான சிறைத்தண்டனை அல்லது 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும்.
இந்தக் குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர், 7 ஆண்டுகளுக்கு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாமல் இருக்கவும், தேர்தலில் வாக்களிக்கத் தகுதியற்றவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சட்டத்தில் 2023 இல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.