
மன்னார், பெப்.26
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி இன்றையதினம் மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மதத்தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான M.A. சுமந்திரன் மற்றும் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலனாதன் உட்பட பிரதேச சபை தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், சிவில் நிறுவனத்தினர் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.