நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு கோட்டாபய ராஜபக்சவே தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் மகாவலி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் சமூக வளைதளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கிரிக்கட் நிறுவனத்தில் ஊழலுக்கு எதிராக தாம் போராடிய போது, தலைமை அதிகாரியும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க ஊழல்வாதிகளை பாதுகாத்தார்.
இதன்போது அவர்களுடன் இணைந்து தமக்கு எதிராக செயற்பட்டார்.
கண்டி மகாவலி ஆற்றின் நடுவில் உள்ள ஒரு பகுதியை தனது நண்பர் ஒருவருக்கு வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க ஒருமுறை தன்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறான அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் ராஜபக்ச தரப்பும் தனக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுவந்தனர்.
குடும்ப அரசியலில் மூலம் அவர்கள் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான ஊழல்வாதிகளுடன் அரசியல் செய்ய தாம் தயாரில்லை.
அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன் என்றார்.