வடக்கு மாகாண ஆளுநரின் மனிதாபிமானப் பணி!

வடமாகாணத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி காணப்படும் கிராமங்களில் மணலாறு என்ற கிராமமும் ஒன்றாகும். மகாவலி  வலயமாக இந்த பகுதி அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்த கிராமத்திலுள்ள எதா வெட்டுனு வெவ வித்தியாலயத்தில் 382 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 19 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர்.

இந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விடுதியில் நீர் விநியோக கட்டமைப்பு சீர்க்குழைந்தமையால் பல நாட்கள் விடுமுறையில் ஆசிரியர்கள் தங்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. 

இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடு பாதிக்கப்பட்டது. இந்த சிக்கல் நிலைமை தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் கவனத்திற்கு கடந்த 12 ஆம் திகதி கொண்டுவரப்பட்டது. விடயங்கள் குறித்து ஆராய்ந்த கௌரவ ஆளுநர் அவர்கள் பாடசாலைக்கான நீர் பிரச்சினையை  நிவர்த்தி செய்யுமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த பணிப்புரைக்கு அமைய விரைந்து செயற்பட்ட  வடக்கு மாகாண கல்வி அமைச்சு, எதா வெட்டுனு வெவ வித்தியாலயத்தின் நீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *