நாட்டை முன்னேற்ற அனுரவும் முன்வரவில்லை, சஜித்தும் முன்வரவில்லை – அவர்களை தும்புத்தடியால் விரட்டுங்கள் – ரணில் கோரிக்கை

இந்த நாடு நெருக்கடியில் இருந்தபோது சஜித்தோ அநுரவோ அதனை முன்னேற்ற முன்வரவில்லை. அவர்கள் பின்வாங்கியுள்ளனர். நான் இந்த நாட்டை பொறுப்பேற்ற பிறகு பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்துள்ளது. மக்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவ சாயம் செய்கின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கஷ்டப்ப டும் போது வராமல் இப்பொழுது தேர்த லுக்காக உங்களிடம் வந்திருக்கும் இவர்களைத் தும்புத் தடியால் அடித்துத் துரத்தவேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்றைய  தினம் (17) இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடபில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

அறகலை போராட்டத்தின் பின்னர் நான் இந்த நாட்டை பொறுப்பேற்ற பின்னர் பல கஷ்டமான முடிவுகளை எடுத்தேன். அதனை நீங்கள் தாங்கிக் கொண்டீர்கள். சிலர் ஒருவேளை தான் சாப்பிட்டார் ள். நீங்கள் உங்களின் பொறுப்பைச் செய்தீர்கள். அவர்கள் தமது பொறுப்பை நிறைவேற்றினார்களா, தேர்தலை நடத் துமாறு முதலில் கோரினார்கள். உரம் இல்லாத நிலையில் தேர்தல் நடத்தி என்ன பயன்? படகுகளுக்கு எரிபொருள் இல்லாத நிலையில், தேர்தல் நடத்தி பயனிருக்கிறதா? அதனால் முதல் பணி யாக உரத்தைப் பெற்றுக் கொடுத்தேன். எரிபொருளை கொடுத்தேன். அந்த நிலையில் எனக்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள்.

தற்பொழுதும் கடினமான நிலை உள்ளது. சமையலறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக் குத் தெரியும். அதனால் தான் சுமுக நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். சம்பள உயர்வு வழங்கி னேன். அஸ்வெசும வழங்கினேன். அது போதுமானதல்ல. அடுத்த வருடம் மேலும் சலுகை வழங்கவேண்டும். வரியைக் குறைப்பது ஐ.எம்.எப். நிபந்த னைக்கு முரணானது. சஜித்தும் அநுர வும் சொல்வதைப் போல தற்போதைய நிலையில் வரியைக் குறைத்தால் வரு மானம் குறையும். நெருக்கடி ஏற்படும். மேலும், இந்தப் பகுதியை சூரிய சக்தி மையமாக மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். தெளிவான திட்டத்துடன் மக் களிடம் வந்திருக்கிறேன். இந்தப் பிரதே சத்தில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களுக்கான வேலைத் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகின்றோம்.

புலிகள் இயக்கத்தில் இணைந்த குற்றச் சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் பலரை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மன்னாரில் உள்ள சிங்களக் கிராமங்களில் வாழும் மக்கள் அஞ்சத் தேவையில்லை.

மன்னார் பிரதேசம் அபிவிருத்தி செய் யப்பட்டு, மன்னாரிலிருந்து திருகோண மலைக்கு புதிய பாதை அமைக்கப்படும். இப்பிரதேசத்தை நாம் முன்னேற்ற நட வடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *