
கொழும்பு, பெப்.26
இலங்கையில் பெண்களின் முகங்களை நிர்வாண உடல்களாக சித்தரிக்கப்படும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அஜித் ரோஹன கூறியதாவது,
தகவல் தொழில்நுட்பங்களை உபயோகம் செய்து மேற்கொள்ளப்படும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் 15-20 முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கின்றன.
மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உள்ளூர் சட்ட அமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
இதேபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கடந்த ஆண்டு பொலிஸாரினால் விசேட சைபர் குற்ற விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டது.
மேலும் பெண்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். துன்புறுத்தலுக்கு ஆளானால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் என தெரிவித்தார்.