193 பேரை பொலிசாரிடம் காட்டிக் கொடுத்த ஸ்டூட் மோப்ப நாய் 

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி சுமார் இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்குச் சென்ற சுமார் 193 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாதமலைக்குப் போதைப்பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன், கொழும்பு, பலாங்கொடை, பொகவந்தலாவை, நோர்வூட், மஸ்கெலியா, தியகல, நோர்ட்டன் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்னர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து கேரளா கஞ்சா, போதை மாத்திரைகள், தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்கள், மதன மோதக்கய, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது ஸ்டூட் என்ற பொலிஸ் மோப்பநாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாயின் உதவியுடன் போதைப்பொருட்கள் வைத்திருந்த சுமார் 87 நபர்களைக் ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று சிவனொளிபாதமலை யாத்திரை செய்வதற்காகக் கேரளா கஞ்சாவுடன் சென்ற மேலும் 13 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும், இவர்களைக் ஹட்டன் நீதிவான் முன்னலையில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *