
கொழும்பு, பெப்.26
கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுகரமான நிலைமை தடுப்பூசி திட்டத்தின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக தடுப்பூசிச் செயற்பாடுகளை துரிதப்படுத்துதல் தொடர்பான உயர்மட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் கிடைப்பதில் உலகளாவில் ஏற்றத்தாழ்வு நிலவுகின்ற இவ்வேளையில், புதிய விவகாரங்கள் தோன்றுவதற்கான அபாயகரமான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ‘அனைவருக்கும் தடுப்பூசி போடுவதே சிறந்த வழி’ என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.