நாடாளுமன்றத் தேர்தல் திகதி அரசமைப்புக்கு முரணானதா? – மறுக்கின்றார் தேர்தல் ஆணையாளர்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அறிவிக்கப்பட்டுள்ள திகதி அரசமைப்புக்கு முரணானது என சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்களைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மறுத்துள்ளார்.

“நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்வரும்  நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஏற்ற திகதி அல்ல. ஏனெனில் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் 5 வார கால இடைவெளி இருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.” – என்று பலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இதற்குத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 4 – 11 வரை ஆகும். வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆரம்பிக்கும் திகதி உட்பட 5 வார இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது. எனவே, தேர்தலுக்கு நவம்பர் 14 ஆம் திகதி சரியானது.” – என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *