
கண்டி, பெப்.26
கண்டி, பன்விலை பிரதேசத்தில் அமைந்துள்ள ரக்ஸாவ தேயிலை தொழிற்சாலையில் சனிக்கிழமை தீவிபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்துச் சம்பவத்தினால் குறித்த தொழிற்சாலை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.