பொதுத் தேர்தல் தொடர்பில் சகல மாவட்ட அலுவலகங்களிலும் உள்ள தேர்தல் உதவி ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் மற்றும் சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு சனிக்கிழமை (28) தேர்தல் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கிடைத்த அனுபவம், பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும்,
அடுத்த பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி நிறைவு செய்வதற்கான ஒழுங்கு விதிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தல் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் குறித்து அன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை நடத்தவும் எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.