
உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷ்ய அரச ஊடகங்கள் விளம்பரங்களை வெளியிடுவதற்கும், பணமாக்குவதற்கும் பேஸ்புக் தடை விதித்துள்ளது என சமூக வலைப்பின்னல் பாதுகாப்புக் கொள்கையின் தலைவர் நதானியேல் க்ளீச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
“நாங்கள் தற்போது உலகில் எங்கிருந்தும் எங்கள் தளங்களில் விளம்பரங்களை வெளியிடுவதற்கோ அல்லது பணமாக்குவதற்கோ ரஷ்ய அரச ஊடகத்திற்கு தடை விதிக்கிறோம்.
மேலதிகமாக ரஷ்ய அரச ஊடகங்களுக்கும் லேபிள்களைத் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இந்த மாற்றங்கள் ஏற்கனவே வெளிவரத் தொடங்கியுள்ளன, மேலும் வார இறுதியில் தொடரும்” என க்ளீச்சர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள நிலைமையை பேஸ்புக் நிறுவனம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மக்களைப் பாதுகாக்க அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் பாதுகாப்புக் கொள்கை கூறியுள்ளது.
முன்னதாக, உக்ரைனில் வெளிவரும் இராணுவ மோதலுக்கு பதிலளிக்கும் வகையில் பேஸ்புக் ஒரு சிறப்பு செயல்பாட்டு மையத்தை நிறுவியுள்ளதுடன் அதில் நிபுணர்கள் (சொந்த மொழி பேசுபவர்கள் உட்பட) பணிக்கமர்த்தப்பட்டுள்ள்ளார்கள்.
எனவே நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து முடிந்தவரை விரைவாகச் செயல்பட முடியும்.” உக்ரைனில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியதாக நிறுவனம் கூறியது, இது மக்கள் இணையத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில் மேலதிக தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்காக தங்கள் சுயவிவரங்களை பாதுகாக்க அனுமதிக்கிறது என தெரிவித்துள்ளார்.