இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஒன்றித்து போட்டியிட சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

திருகோணமலை மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு ஆசனத்தினை யேனும் தக்கவைத்துக்கொள்ள அனைவரும் ஒன்றித்து போட்டியிட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அகில இலங்கை இளைஞர் அணி செயலாளர் ஶ்ரீ பிரசாத் கருத்து வெளியிட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட கட்சிக் காரியாலயத்தில் இன்று 27.09.2024 இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

வட கிழக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதோடு திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் இருப்பினை கருத்தில் கொண்டு, பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் தமிழ் தேசியம் சார்ந்து தமிழ் இனத்தின் இருப்பிற்காக முன்னிற்கின்ற சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ அல்லது தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்புடனோ இணைந்து போட்டியிடும் நோக்கு எமக்கு இல்லை எனவும் தமிழ் மக்களது எதிர்காலத்திற்காகவும் பாராளுமன்ற இருப்பினை தக்கவைத்துக்கொள்ளவும் அனைவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் அணி சேர வேண்டும் என இதன் போது அழைப்பு விடுக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *