
முல்லைத்தீவு, பெப்.26
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீள செயற்படவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிற்சாலையை தங்கி வாழ்ந்த பல குடும்பங்கள் இன்று பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். மீள்குடியேறி பன்னிரெண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் குறித்த தொழிற்சாலையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் அதன் பணிகள் நிறைவு செய்யப்படாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது