கிளிநொச்சி, இராமநாதபுரம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முள்ளியவளை, நெடுங்கேணி ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர்களின் வழிநடத்தலில் கிளிநொச்சி குற்ற புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.