பெரும் போக பயிர்ச்செய்கைக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நீர் திறந்துவிடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அதன் செயலாளர் எம். ப. எம்.விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் மகாவலி அதிகாரசபை, விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இவ் வருட பெரும் போகத்தில் 08 இலட்சம் ஏக்கர் நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, பெரும் போகத்திற்கு போதுமான நீர் கொள்ளளவு இருப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.