
கொழும்பு, பெப்.26
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் தன உத்தியோகபூர்வமாக தனது பதவியையும் ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிலையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், செழிப்பை அதிகரிக்கவும், அனைவருக்கும் ஆரோக்கியமான, இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்யவும் இந்த நாட்டு அரசு மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என்று தூதுவர் சுங் கூறினார்.
சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
இது சிவில் சமூகம், தனியார்துறை மற்றும் இலங்கை மக்கள் உட்பட இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவுகளை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா வலுப்படுத்துகிறது, என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.