எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தான் மக்கள் மக்கள் தான் ஈ.பி.டி.பியினர் எனவும் சுயலாப அரசியலுக்காக ஸ்ராண்ட் இல்லாத மோட்டார் சைக்கிள் போல் தேர்தலில் கூட்டு சேரமாட்டோம் எனவும் தேர்தல் முடிந்த பின்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை பற்றி சிந்திப்போம் எனவும் தெரிவித்தார்.