இணையத்தினூடாக இடம்பெறும் பண மோசடிகள் அதிகரிப்பு – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இணையத்தினூடாக இடம்பெறும் பண மோசடிகள் அதிகம் பதிவாகுவதாக பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர்.

எனவே வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தற்காலிக கடவுச்சொற்கள் (OTP) அல்லது வங்கி வழங்கிய கடவுச்சொற்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 

ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்களின் போதே இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

எந்தவொரு லொட்டரிகள், வாடிக்கையாளர் கணக்கெடுப்பு, நன்கொடைகள் போன்றவற்றில் தனக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று சம்பத் வங்கி அறிவித்துள்ளது. 

பிரபலமான வர்த்தகநாமங்கள் மற்றும் சேவைகள் என்ற போர்வையில் தள்ளுபடிகள், பரிசுகள், அதிர்ஷ்ட சீட்டிழுப்புக்கள் போன்றவற்றை வழங்குவதாக காண்பித்து, போலியான இணையப் பக்கங்களுக்கு உங்களை வழிநடத்திச் செல்கின்ற போலியான சமூக ஊடக விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *