தமிழர் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து – மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்

 

கிளிநொச்சி – விசுவமடு  பகுதியில் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று  காலை விசுவமடு – கண்ணகி நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குமாரசாமிபுரம் பகுதியினை சேர்ந்த 43 வயதுடைய  மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசேந்திரம் கௌதமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

கண்ணகி நகர் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த நிலையில் தர்மபுரம் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவரின் உடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 பேருந்தின் சாரதி தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *