பியர் மற்றும் வைன் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படாத சில இடங்களுக்கு, அதற்கான அனுமதியை வழங்க இலங்கை மது வரி திணைக்களம் முடிவு செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான உணவு, பானங்கள் மற்றும் தங்குமிடங்களை வழங்குவதற்கான வர்த்தக அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ள இடங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படவுள்ளது.
உணவகங்கள், ஹோட்டல்கள், தங்குமிடங்களை வழங்கும் வீடுகளை சட்ட வரையறைக்குள் கொண்டு வந்து, அவற்றின் உரிமையாளர்கள் மாத்திரமல்லாது சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் எதிர்பாராத சிரமங்களை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இடங்களை சட்ட ரீதியாக மதுபானங்களை விற்பனை செய்யும் இடங்களாக உள்ளடக்குவதன் மூலம் சட்டத்திற்கு உட்பட்டு மற்றும் தரமான மதுபானங்கள் மாத்திரம் அவற்றில் விற்பனை செய்யப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த முடியும் என மது வரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.