புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மதுரங்குளி, கணமூலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலாபம் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பவுசர் ஒன்றும், அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளது. எனினும் குறித்த முச்சக்கர வண்டியின் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
