பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி திருகோணமலையில் இன்று கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட வாலிபர் முன்னணி ஏற்பாடு செய்த கையெழுத்து போராட்டம் திருகோணமலை சிவன் கோவிலடி தந்தை செல்வா உருவ சிலைக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் கையெழுத்து இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.


