புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படும் வரை பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
சகல தேர்தல்களின்போதும் தொகுதிவாரியில் 60 வீதம், விகிதாசார முறையில் 40 வீதம் என்ற அடிப்படையில் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் கலப்புத் தேர்தல் முறையிலான அறிக்கையை முறைப்படுத்துவதற்கு விசேட தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மை நிலைப்பாடுகளை உருவாக்குவதற்காக வெற்றிபெற்ற கட்சி அல்லது குழுவுக்கு மேலதிகமாக இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொடுக்கவும் பரிந்துரை முன்வைக்க கொள்கை அடிப்படையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.