கரவெட்டி கமநல சேவைகள் நிலையத்துடன் இணைந்ததாக, கமநல உணவகமொன்று இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கரவெட்டி கமநல உணவகத்தினை திறந்து வைத்தார்.
அங்கஜன் இராமநாதன் விவசாய பிரதி அமைச்சராக இருந்தபோது ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், இப்பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து இடம்பெற்ற வைபவ நிகழ்வில், உணவக பணியாளர்களுக்கான சீருடைகளும், உணவு உற்பத்தி தொழில் முயற்சியாளர்களுக்கான உதவித்தொகையும் வழங்கி வைக்கப்பட்டன.