
கொழும்பு, பெப்.27
போதைப்பொருள் வியாபாரியான தெமட்டகொட சமிந்தவின் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்ற பெண் ஒருவர் ரூ.20 லட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் குடு மேரி எனப்படும் மைக்கேல் எலிசபெத் மேரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தெமட்டகொட லக்சிறி செவன வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
47 வயதான சந்தேக நபர் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.