
யாழ்ப்பாணம், பெப்.27
வடமாகாணத்தில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் தொகை மிகவும் குறைவாகக் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்படுகிறது.
3 வது டோஸ் தடுப்பூசி வழங்கல் இடம்பெற்றுவரும் நிலையில் பல மாகாணங்களில் 60 வீதத்துக்கு அதிகமானவர்கள் குறித்த தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
ஆனால் வடமாகாணத்தை பொறுத்தவரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்படுகின்ற நிலையில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் 40வீதமாக அதிகரிப்பதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.