
கொழும்பு, பெப். 27
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செய்தி ஒன்றுடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூன்றாவது பெரிய பதவியை வகித்து வரும் ஜேன் நுலான்ட் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரியவருகிறது.
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் இந்த அதிகாரி எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நுலான்ட் தனது இந்த விஜயத்தின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இலங்கைக்கு வரும் நுலான்ட், ஜனா திபதி ஜோ பைடனின் இலங்கை தொடர்பான வலுவான செய்தியை எடுத்து வரவுள்ளதாக கூறப்படுகிறது.