எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க மத்திய வங்கியால் புதிய யோசனைகள

கொழும்பு, பெப். 27

டொலர் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு முகங் கொடுத்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான யோசனையொன்றை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், தேவைக்கு ஏற்ப எரிபொருளைக் கொள்வனவு செய்யுமாறும் அதிகளவில் கொள்வனவு செய்வதால் தட்டுப்பாடு ஏற்பட்டு கறுப்புச் சந்தை விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த யோசனையை அரசாங்கத் திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு கடனுதவியை தொடர்ந்தும் வழங்கினால் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பது கடினமாகும் என்பதால், அதற்கான கடனை உடனடியாக நிறுத்தவும் மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கும் சுமார் 56 பில்லியன் ரூபாவை (28 பில்லியன் அமெ ரிக்க டொலர்கள்) செலுத்த வேண்டியுள் ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டுத்தாபனத்துக்கு மேலும் கடனுதவி வழங்கினால் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதற்கும் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்பதால், உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

எரிபொருள் விற்பனையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நட் டத்தைக் குறைப்பதற்காக எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்குமாறும் மத்திய வங்கி அரசாங்கத்துக்கு முன்மொழிந்துள்ளது. வார வேலை நாட்களின் எண்ணிக் கையை நான்காக குறைத்து, நாளொன் றின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.

இதன்படி, நிறுவனங்களின் செயற்பாடுகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5:30 மணிவரை தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சொந்த வாகனங்களைப் பயன்படுத்து வதைத் தடுக்கவும், பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டுமென்றும் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, மத்திய வங்கியின் பிரேரணையானது நெருக்கடி மற்றும் எரிபொருளைச் சேமிப்பதன் அவசி யத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பாரிய ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *