
இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
முன்னர் எரிபொருள் இல்லாமல் இயக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றை தயாரித்தவரான சசிரங்க டி சில்வா என்பவரே இந்த மோட்டார் சைக்கிளையும் தயாரித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பொடி, செசி மற்றும் மின்சார பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த மோட்டார்சைக்கிள் எதிர்வரும் ஓகஸ்ட், 2022க்குள் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார்சைக்கிளின் விலை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.