நீர் மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதியளவு மழை பெய்து நீர்த்தேக்கங்கள் நிரம்பும் வரையில் மின்விநியோக தடை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு மின் விநியோக துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டாலும், நேரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, தற்போது மின் உற்பத்தித் தேக்கங்களில் உள்ள நீர் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே மின் உற்பத்திக்கு போதுமானதாக இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நாட்டுக்குத் தெரிவித்தார்.