
கொழும்பு, பெப் 27: இன்று இரவு மின்வெட்டு அமல்படுத்தப்படாது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறுகையில் ” இன்று A,B,C வலயங்களில் பகல் நேரம் 2 மணி 30 நிமிட மின்வெட்டு அமல்படுத்தப்படும். ஆனால், நாளை முதல் மீண்டும் வழமைபோல மின் வெட்டு அமல்படுத்தப்படும்.
எரிபொருள் பற்றாக்குறையால், சில மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளமையாலும், நாட்டில் நிலவும் வரட்சி நிலையால் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து நீர் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதாலும் மின்துண்டிப்பை அமல்படுத்தும் கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.