
கொழும்பு, பெப் 27: தனியார் பேருந்துகளுக்கு, சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படாவிட்டால் திங்கள்கிழமை முதல், தனியார் பேருந்து சேவை 50 சதவீதமாக குறைக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “நாட்டில் டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளுக்கு கட்டண அதிகரிப்புக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். தனியார் பேருந்துகளுக்கு, சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், திங்கட்கிழமை முதல் பேருந்து சேவை 50 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றார் அவர்.