இலங்கை உதைபந்தாட்ட அணியின் தமிழ் வீரர் மரணம்

கொழும்பு, பெப் 27: இலங்கை உதைபந்தாட்ட அணி வீரர் டக்சன் புஸ்லாஸ் (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த இவர், இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்காக விளையாடி வந்தார். மேலும், மாலை தீவிலுள்ள பிரபல உதைபந்தாட்ட அணி ஒன்றுக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடி வந்துள்ளார். இவர் மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் விளையாடும் வீரராக இருந்தார்.இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகாண் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார்.

அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *