16 வயது மாணவனின் உயிரைப் பறித்த வாகன விபத்து!

 

நாவுல மின்சார சபைக்கு முன்பாக நேற்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, முன்னால் வந்த கெப் வண்டி மோட்டார் சைக்கிளை மோதியது.

இதில் காயமடைந்த மாணவன், நாலந்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.

நாவுல – பெனலபொட பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட  16 வயதுடைய பிரேமோத் சத்சர என்ற பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கெப் வண்டியின் சாரதி ஹசலக்க பொம்பல்வ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்பதுடன், சந்தேகநபர் நாவுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *