முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகளவான கடல் உணவுகள் பிடிக்கப்பட்டு வருகின்றது.
இரவு வேளைகளில் ஒளிபாய்ச்சி இறால், மீன்கள் போன்ற கடலுணவுகள் பிடிக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
சிறுகடலையும், பெருங்கடலையும் இணைக்கும் பகுதியாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் காணப்படுகின்றது.
குறித்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

